தலயா? தளபதியா? பிரபல நடிகருக்கு யாரை பிடிக்குமாம் தெரியுமா?

தலயா? தளபதியா? பிரபல நடிகருக்கு யாரை பிடிக்குமாம் தெரியுமா?


actor-bharath-favorite-hero-name-reveled

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் பரத். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற படத்தில் அறிமுகமாகி தனது முதல் படத்திலையே பிரபலமானார் நடிகர் பரத். பாய்ஸ் படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வரிசையாக நடித்தார் பரத்.

bharat

இவர் நடித்த காதல் திரைப்படம் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. காதல் படத்தின் வெற்றிக்கு நடிகர் பரத்தின் அழகான நடிப்பும் ஒரு காரணம். அதன்பின்னர் எம்டன் மகன், சேவல், வெயில், நேபாளி, கண்டேன் காதலை என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் பரத்.

தற்போது 8 , காளிதாஸ், நடுவண் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் பரத். இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் கலந்து கொண்ட இவர் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

bharat

அதில் பேசிய அவர் அஜித் நடித்த விஸ்வாசத்தில் வரும்  கண்ணான கண்ணே பாடல்தான் தற்போது மிகவும் பிடித்த பாடல் என கூறினார். மேலும் உங்களுக்கு பிடித்தது தலயா தளபதியா என்ற கேள்விக்கு, யோசிக்காமல் சட்டென்று தளபதி என கூறி விஜய் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தினார்.