
நாடு முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி நாளுக்கு நாள் பெரும் பாதிப்பை ஏற
நாடு முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி நாளுக்கு நாள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று சென்னையில் தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், என்னை மதித்து இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி. தன்னால் முடிந்த உதவிகளை யார் செய்கிறார்களோ அவர்கள்தான் கோடீஸ்வரன். நானும் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களை செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் அண்ணாத்த படம் குறித்து அவர் கூறுகையில், 5 மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கேன். ஆனால் இந்த படம் எனக்கு சவாலாக அமைந்தது. இதற்காக நான் 15 கிலோ எடையை குறைத்திருக்கிறேன். நான் மிகப்பெரிய ரஜினி ரசிகர். அவருக்குள் கலைஞன் பிறவியிலேயே இருக்கிறார். மேலும் குறும்பு, காமெடி உணர்வு அவருக்குள் இயல்பாகவே உள்ளது. என்னைக் கேட்டால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் தன் திறமையால் மக்களை மகிழ்விக்கட்டும். ஒரு ரசிகனாக நானும் அதைதான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement