வீரம் பட நடிகர் பாலாவுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் மனிதநேய டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து அவர் காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் மற்றும் அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் படத்தில் அவருக்கு தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
தமிழில் சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மலையாளத்தில் செம பிஸியாக இருக்கும் பாலா இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். இவருக்கு 2010ஆம் ஆண்டு அம்ருதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மேலும் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். நடிகர் பாலா ஏராளமான சமூக சேவைகளை செய்துவந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம் நடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. மனிதாபிமானம் மிக்க செயல்பாடுகள் என்ற பிரிவில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டம் இந்தியாவில் முதலில் ஷாருக்கானுக்கும், தற்போது தென்னிந்தியாவில் நடிகர் பாலாவுக்கும் என இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 24ஆம் தேதி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், பாலாவை கவுரவிக்கவுள்ளார்.
Advertisement
Advertisement