சினிமா

மீண்டும் புதிய சீரியலில் களமிறங்கும் ஷிவானி! அவருடன் ஜோடி சேரபோவது இவரா?? செம ஷாக்கில் ரசிகர்கள்!!

Summary:

பிக்பாஸ் ஷிவானி விஜய் டிவியில் புதிய சீரியலில் நடிக்கவிருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நடிகர் அசீம் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர் ஷிவானி. இந்த தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக நடிகர் அசீம் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஷிவானி மீண்டும் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் பாதியிலேயே அவர் சீரியலை விட்டு விலகினார்.

பின்னர் ஷிவானி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டை ரோஜா என்ற தொடரில்  டபுள் ஆக்ஷனில் நடித்து வந்த நிலையில் அதிலிருந்தும் பாதியில் இருந்து விலகினார். மேலும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது வித்தியாசமான கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இந்தநிலையிலேயே ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு மிகவும் அமைதியாக இருந்த அவர் பாலாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் தனது அம்மா கண்டித்ததை தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் ஈடுபாட்டுடன் ஈடுபட்டார்.

இந்த நிலையில் விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்றில் ஷிவானி நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது. மேலும் அத்தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக பகல் நிலவு சீரியலில் நடித்த அசீம் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அசீம் சமீபத்தில் தான் தனது மனைவியை விவாகரத்து செய்ததை அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Advertisement