சினிமா

அடக்கடவுளே! பிக்பாஸில் கலந்துகொள்ள முடியாததற்கு காரணம் இதுதானா? ஷாக் தகவலை வெளியிட்ட பகல்நிலவு ஹீரோ!

Summary:

தனது அம்மாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தான் பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை என நடிகர் அஸீம் கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாக  56 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டுள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து இதுவரை நடிகை ரேகா, பாடகர் வேல்முருகன் அவரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி, பாடகி சுசித்ரா மற்றும் கடந்தவாரம் சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றபட்டுள்ளனர். 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரியாக விஜய் தொலைக்காட்சியில் பகல்நிலவு கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் ஹீரோவாக,  ஷிவானிக்கு ஜோடியாக நடித்த அஸீம் நுழையவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. மேலும் அவர் சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஆனால் இதற்கிடையில் ஹோட்டலில் இருந்து அஸீம் திடீரென வெளியேறியதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் இதுகுறித்து அஸீம் தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், தனது அம்மாவிற்கு காலில் பயங்கர எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடவுள் புண்ணியத்தாலும், உங்கள் அனைவரது பிரார்த்தனைகளால் அவர் தற்போது குணமடைந்து வருகிறார். விரைவில் அவர் நலம் பெற்று வீடு திரும்புவார் என கூறியுள்ளார்.


Advertisement