நடிகர் ஆர்யாவை மணக்க போட்டிபோட்ட மாடல் சீதாலட்சுமியை இப்போ பார்த்தீங்களா.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

நடிகர் ஆர்யாவை மணக்க போட்டிபோட்ட மாடல் சீதாலட்சுமியை இப்போ பார்த்தீங்களா.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!


actor-arya-show-seethalakshmi-recent-photo-viral

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, சாக்லேட் பாயாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஆர்யா. அவருக்கு பிரபல தொலைக்காட்சியில் பெண் பார்க்கும் படலமாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 18 இளம்பெண்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான போட்டிகள் நடைபெற்றது. பல போட்டிகளைக் கடந்து இறுதி நிலைக்கு மூன்று பெண்கள் தேர்வானர். ஆனால் கடைசியாக ஆர்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் கஜினிகாந்த் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகள் உள்ளார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பல போட்டிகளை கடந்து இறுதிநிலைக்கு வந்தவர் மலையாள பெண் சீதாலட்சுமி. மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வார். இந்த நிலையில் அவர் தற்போது செம கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.