எல்லாம் அதற்காகதான்.. திவ்யா நடித்து நாடகமாடுகிறார்.! சீரியல் நடிகர் அர்னவ் பரபரப்பு பேட்டி!!
சன் டிவியில் ஒளிபரப்பான 'கேளடி கண்மணி' தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் திவ்யா ஸ்ரீதர் மற்றும் நடிகர் அர்னவ். திவ்யா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு ஆறு வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் சீரியலில் நடித்தபோது திவ்யா மற்றும் அர்னவ்க்கு இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து திவ்யா அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் திடீரென நேற்று திவ்யா, தன்னை கணவர் அர்னவ் அடித்து உதைத்து துன்புறுத்தினார். அதில் நான் மயக்கமுற்றேன். பின் கண்விழித்து பார்த்தபோது அர்னவ் அங்கு இல்லை. வயிறு வலித்து ப்ளீடிங் ஆனதால் மருத்துவமனைக்கு சென்றேன். வயிற்றில் அடிபட்டதால் குழந்தை எந்நேரமும் கலையலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் என கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
ஆனால் இந்த புகாரை அர்னவ் மறுத்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, தனது மனைவி திவ்யா, அவரது நண்பர் ஈஸ்வர் என்பவருடன் இணைந்து மூன்று மாத கருவை கலைக்க நாடகம் ஆடுகின்றார். ஈஸ்வர் என்பவர் தன்னை அடிக்கடி மிரட்டி வருகிறார் என தெரிவித்தார். நண்பன் எனக்கூறி திவ்யாவை தவறாக வழிநடத்துகிறார்.
என் மனைவியை நான் அடித்து தாக்கியதாக கூறப்படும் அந்த நேரத்தில் நான் அவருடன் இல்லை. அதற்கான சிசிடிவி ஆதாரம் என்னிடம் உள்ளது. நான் திவ்யாவை விவாகரத்து செய்யப்போகிறேன் என எங்கும் கூறவில்லை. அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். அவர் கருவில் இருக்கும் குழந்தை எனக்கு பத்திரமாக வேண்டும் என அர்னவ் கூறியுள்ளார்.