சினிமா

எப்படி சமாளிப்பேன்.. தம்பி மயில்வாகனம் அப்புகுட்டிக்கு இப்படியொரு நிலைமையா! வேதனையில் புலம்பும் நடிகர்!!

Summary:

தமிழ் சினிமாவில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நகைச்சுவ

தமிழ் சினிமாவில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் அப்புகுட்டி. அதனை தொடர்ந்து அவர் ‘அழகர்சாமியின் குதிரை’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படம் அனைவரிடமும் நல்ல பாராட்டை பெற்று தேசிய விருதை வென்றது. இந்நிலையில் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவியும் என  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அப்புக்குட்டி அஜித்தின் வீரம் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் அப்புக்குட்டி தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு அருகேயுள்ள ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்த அவர் சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அதை தொடர்ந்து தற்போது கோவூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அப்புக்குட்டி சொந்த வீடு வாங்கும் அளவிற்கு கையில் பணம் இல்லை எனவும், கொரோனா முதல் அலையின் போதே தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், மேலும் தற்போது கொரோனா இரண்டாம் அலையில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறேன். எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement