கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறாரா இந்த நடிகை! அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!

கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறாரா இந்த நடிகை! அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!


Actor anasuya not act in Silk smitha biopic

80, 90களில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தனது எல்லையற்ற கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர் மறைந்த நடிகை  சில்க் ஸ்மிதா.  கவர்ச்சி கன்னியாக நடித்த இவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தியில் தி டர்ட்டி பிக்சர் என்ற படம் உருவானது. அதில் வித்யா பாலன் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அதனைத் தொடர்ந்து தமிழில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பலரும் முயற்சி செய்த நிலையில்,  தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக இயக்க உள்ளார். அவள் அப்படித்தான் என்ற பெயரில் படத்தை எடுக்கவுள்ளனர். 

Anasuya

இந்நிலையில் இப்படத்தில் சில்க் ஸ்மிதாவாக பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், தெலுங்கு நடிகையுமான அனசுயா பரத்வாஜ்  நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அனசுயா சமீபத்தில்,  எந்த ஒரு பயோபிக் படத்திலும் நான் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை, நன்றி' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வேறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.