25 கோடி..! கொரோனோவை எதிர்க்க பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி தருவதாக நடிகர் அக்‌ஷய்குமார் உறுதி.!

25 கோடி..! கொரோனோவை எதிர்க்க பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி தருவதாக நடிகர் அக்‌ஷய்குமார் உறுதி.!


Actor akshay kumar donates 25 crores for corono pm relief fund

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதேநேரம், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, மக்களும் தங்களால் முடிந்த நிதியை அரசுக்கு தரவேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Akshai kumar

இந்நிலையில், பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து நடிகர் அக்‌ஷய்குமார் ரூ. 25 கோடி நிதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். தன்னுடைய சேமிப்பில் இருந்து, ரூபாய் 25 கோடியை பிரதமர் நிதிக்கு அளிக்க உறுதியளிக்கிறேன் என்றும் மக்களின் உயிர்களை காப்போம் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் அக்‌ஷய்குமார்.