"எல்லாமே அஜித் தான்., அஜித் ஒரு சொக்கத்தங்கம்" - அஜித்தை நேரில் சந்தித்து ஆட்டோகிராப் வாங்கிய ரசிகையின் உருக்கமான பதிவு..!!

"எல்லாமே அஜித் தான்., அஜித் ஒரு சொக்கத்தங்கம்" - அஜித்தை நேரில் சந்தித்து ஆட்டோகிராப் வாங்கிய ரசிகையின் உருக்கமான பதிவு..!!


actor-ajith-signature-to-his-fan

நடிகர் அஜித் திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 47-வது துப்பாக்கிசூடு போட்டியில் திருச்சி ரெயில் கிளப் சார்பில் கலந்து கொண்டார். மேலும் அந்த போட்டிகளில் 4 தங்கம் மற்றும் 2 வெண்கலபதக்கங்களை அஜித் வென்று அசத்திய நிலையில், பிரபல துப்பாக்கி சூடும் வீராங்கனையான மேக்னாவை சந்தித்துள்ளார்.

actor ajith

இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்னா வெளியிட்டுள்ளார். மேலும் அதில், "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒருநாள் இருக்கும். அது உங்கள் வாழ்நாள் தருணமாக இருக்கலாம். அந்த தருணத்தில் நீங்கள் மிகப்பெரும் மகிழ்ச்சியை பெறுவீர்கள். இதுதான் உங்கள் நாள்.

actor ajith

18.8.2022 இதுதான் என் நாள். என் வாழ்க்கையின் சந்தோஷம். என் இலக்கு. என் உத்வேகம். அனைத்துமே எனக்கு அஜித் தான். நான் அவரை சந்தித்ததை என்னால் நம்ப இயலவில்லை. நேற்றிலிருந்து நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் சந்தித்தது எனக்கு கனவு போன்று தான் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

actor ajith

மேலும் அஜித் ஒரு சொக்கத்தங்கம். மிகவும் பொறுமைசாலி, எளிமையானவர், எதார்த்தவாதி என்றும் அவரை புகழ்ந்துதள்ளியுள்ளார். குறிப்பாக அவர் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டார் என்றும், எங்களை புகைப்படத்துக்காக காக்க வைத்ததற்காக மேலாளரை அழைத்து நாங்கள் காத்திருக்க ஒரு இடத்தையும் ஏற்பாடு செய்துகொடுத்தார் என்றார்.

actor ajith

அத்துடன் 3 முறை மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அஜித் மிகவும் அழகாக இருப்பதாகவும், சந்திரனைப் போல பிரகாசமாக இருப்பதாகவும், ஆகஸ்டு 18ஆம் தேதி என் வாழ்வில் மகிழ்ச்சியான நாளாக அறிவிக்கிறேன்" என்றும் கூறியுள்ளார் மேக்னா. இது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.