13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
அந்த மனசுதான் சார் கடவுள்.. நடிகர் அஜித்தின் நெகிழ்ச்சி செயலால் கண்கலங்கிய தாய்..! வைரல் வீடியோ..!!
பிரபல நடிகர் அஜித்குமார் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. தனக்கு பிடித்த மற்ற துறைகளிலும் ஈடுபாடு காட்டுவார். இதற்கு முன் கார் பந்தயத்தில் தனது பங்களிப்பை வெளிப்படுத்திய நிலையில், தற்போது துப்பாக்கி சூடும் கலையிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.
இவர் முன்பே கோயம்புத்தூரில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டதை தொடர்ந்து, தற்போது திருச்சியில் நடைபெற்ற போட்டியில் நேற்று கலந்து கொண்டார். இவர் வருவது குறித்து அறிந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் குடும்பத்துடன் முற்றுகையிட்டு விட்டனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின் இந்தக் கூட்டத்தைப் பார்த்த தல அஜித் கட்டிடத்தின் உச்சியில் இருந்து கை அசைத்துவிட்டு சென்றார். அவர் கீழ் இறங்கி செல்லும்போது ஒரு பெண்மணி கை குழந்தையுடன் அஜித்தை பார்க்க நின்ற நிலையில், இதனை கவனித்த அஜித் உடனடியாக அருகில் ஓடிவந்து அந்த குழந்தையை வாங்கி வைத்துக்கொண்டார்.
மேலும் தாய் மற்றும் குழந்தை, அருகிலிருந்த பெண்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்தார். 'நடிகர் அஜித் தன் குழந்தையை வாங்கி வைத்துக்கொண்டு புகைப்படம் எடுக்கும் போது, தாய்க்கு கண்ணே கலங்கிவிட்டது'. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் பூரித்துள்ளனர்.
கை குழந்தையுடன் வெளியில் காத்திருந்த பெண்.
— குருவியார் (@Kuruviyaaroffl) July 27, 2022
உள்ளே அழைத்து போட்டோ எடுத்து நலம் விசாரித்து அனுப்பிய அஜித். pic.twitter.com/DUvzYBXlKc