13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
கோட் படக்குழுவை வாழ்த்திய தல அஜித்; வெங்கட் பிரபு மகிழ்ச்சி.!
ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, யோகிபாபு, மோகன், ஜெயராம், லைலா, சினேகா, வைபவ், பிரேம்ஜி, ஜெயராம், விடிவி கணேஷ், பார்வதி நாயர் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் கோட் (The Greatest of All Time GOAT).
செப்டம்பர் 05ம் தேதியான இன்று கோட் திரைப்படம் உலகளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள திரையரங்குகள் பலவும் விழாக்கோலம் பூண்டுள்ளன. கோட் படம் வெற்றிபெற, திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜை மறைமுகமாக கலாய்த்து வம்புக்கு இழுத்த வெங்கட் பிரபு; கோட் சம்பவம்.!
அல்டிமேட் ஸ்டார் வாழ்த்து
இந்நிலையில், நடிகர் அஜித் குமார், கோட் திரைபடக்குழுவுக்கும், இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான தகவலை வெங்கட் பிரபு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் ரசிகர்கள் எதிரெதிர் துருவங்களாக உருவாக்கப்பட்ட விஜய் - அஜித் படங்கள் எப்போதும் ரசிகர்களால் பெரிதளவு எதிர்பார்க்கப்படும். மங்காத்தா திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வழங்கி மிகப்பெரிய வெற்றி அஜித்துக்கு கிடைத்த நிலையில், தற்போது பல ஆண்டுகள் கழித்து விஜயை வைத்து கோட் படத்தை இயக்கி இருக்கிறார்.
Thank q #Thala #AK my anna for the first wish for @actorvijay na, me and team #GOAT we all love u❤️🤗😘 pic.twitter.com/81i7biJrBm
— venkat prabhu (@vp_offl) September 4, 2024
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜை மறைமுகமாக கலாய்த்து வம்புக்கு இழுத்த வெங்கட் பிரபு; கோட் சம்பவம்.!