சினிமா

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துவிட்ட அஜித் மகள்! புகைப்படம் இதோ!

Summary:

Actor ajith daughter anoshka latest photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். தமிநாடு மட்டும் இல்லது உலகம் முழுவதும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார் அஜித். படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அஜித் என்றாலே சினிமாவில் நடிக்கும் நேரத்தை தாண்டி மீதம் உள்ள நேரங்களில் தனது குடும்பத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்.

தல அஜித்துக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித், ஷாலினியின் மகள் அனோஷ்கா புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. குழந்தையாக இருக்கும் போது பார்த்ததை விட தற்போது மிகவும் வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு வளர்ந்துவிட்டார் அஜித் மகள் அனோஷ்கா. இதோ அவரது புகைப்படம்.


Advertisement