"கொஞ்ச நாள் பிரேக் எடுத்துட்டு வரேன்"..சிவகார்த்திகேயனின் திடிர் முடிவால் ரசிகர்கள் வருத்தம்.?

"கொஞ்ச நாள் பிரேக் எடுத்துட்டு வரேன்"..சிவகார்த்திகேயனின் திடிர் முடிவால் ரசிகர்கள் வருத்தம்.?Acter sivakarthikeyan suddenly leave twitter account

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து முன்னேறி வெள்ளி திரையில் ஹீரோவாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் முதன்முதலில் 'மெரினா' திரைபடத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் இவரின் நடிப்பு பெரியதாக பேசப்பட்டது.

சிவகார்த்திகேயன்

இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தது. மனம் கொத்தி பறவை, 3 , எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து முண்ணனி நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'அயலான்' திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் இவர் கதாநாயகனாக நடிக்கும்  'மாவீரன்' படத்தின் படபிடிப்பில்  பிஸியாக இருக்கிறார். இதுபோன்ற நிலையில் ட்விட்டரில் இருந்து விலகுவதாக சிவகார்த்திகேயன் திடிர்  அறிவிப்பை ட்விட் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன்அதில் சிவகார்த்திகேயன் கூறியதாவது," ட்விட்டரில் இருந்து சிறிது நாட்கள் இடைவேளை எடுத்து கொண்டு திரும்பி வருகிறேன். டேக் கேர் " என்று குறிப்பிட்டிருக்கிறார். இவரின் இந்த முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது