கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
ரஜினியிடம் சண்டை போட்டு கமலுடன் சேர்ந்து கொண்ட நடிகர்.. கமல் மற்றும் ரஜினிக்கு நடுவில் பனிப்போர் நிலவுகிறதா.?

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து தனக்கென தனி இனத்தை நிலைநாட்டி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். ரஜினி மற்றும் கமல் படம் என்றாலே ஓடோடி பார்க்கும் ரசிகர் கூட்டம் இருந்து வந்தது.
இன்றுவரை ரஜினி மற்றும் கமல் தொடர்ந்து நடித்து வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வருகின்றனர். இதன்படி ரஜினி சமீபத்தில் நடித்து வெளியான 'அண்ணாத்த' திரைப்படம், கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படமும் மிகப்பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நிலையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நாசர், ரஜினியுடன் 'வேலைக்காரன்' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ரஜினிக்கும் நாசருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாம்.
இதனையடுத்து நாசர், ரஜினி படங்களில் நடிப்பதை தவிர்த்து கமல் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாராம். இதன்படி அவ்வை சண்முகி, விஸ்வரூபம், தேவர் மகன் போன்ற பல திரைப்படங்களில் நாசரை விட்டுக் கொடுக்காமல் கமலும் தன் படங்களில் நடிக்க இணைத்துக் கொண்டாராம். இச்செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது.