அந்த மாதிரி பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் கார்த்தி.. ரசிகர்களுக்கு அறிவுரை.!Acter karthi advice his fans

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். முதன் முதலில் தமிழ் சினிமாவில் 'பருத்திவீரன்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Karthi

முதல் படமே மிகப் பெரும் வெற்றியைப் பெற்று பல விருதுகளை குவித்தது. இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வெற்றி திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னின் செல்வன்' திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரது நடிப்பு திறமை ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வந்தது. இதனையடுத்து தற்போது ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் கார்த்தி 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பது ரசிகர்களுக்கு கேள்வி ஏற்படுத்தி வருகிறது.

இது போன்ற நிலையில், பொதுமக்களிடம் போதைப் பொருட்களை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் வைத்தும், போதையில் தமிழகம் என்ற ஹீலியம் பலூன்களை பறக்க விட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Karthi

சென்னை மாநகராட்சி காவல் துறை ஏற்படுத்தி இருக்கும் இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா, மகேஷ், கானா பாலா போன்ற பல நடிகர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் கார்த்தி "மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதும் ஒருவருக்கு வீரம் ஆகாது" என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.