மதுரையில் தனியாக தெருவில் ஓடி சென்ற தனுஷ்.. அடையாளம் கண்டுபிடித்த ரசிகர்கள் செய்த செயல்.?acter-dhanush-viral-video

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழில் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் அறமுகமானார். இதன் பின்பு காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

danush

நடிகர் தனுஷ் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வருகிறது.

படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா, ஜான் கொக்கன், சிவராஜ் குமார் போன்றவர்கள் நடித்துள்ளனர். 80களில் காலகட்டத்தை சேர்ந்த கதைகளை கொண்ட 'கேப்டன் மில்லர்' திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

danush

இது போன்ற நிலையில், நடிகர் தனுஷ் இந்த படத்தில் பிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். இதன்படி மதுரையில் தெருக்களில் தனியாக ஜாக்கிங் செய்து வருகிறார். முகம் தெரியக்கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து இருந்தும் ரசிகர் இவரை கண்டுபிடித்து வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது