தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ஜட்டியுடன் இருக்கும் குட்டி அதர்வா முரளி.. இணையத்தில் வைரலான நடிகர் முரளி அதர்வா புகைப்படம்.?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அதர்வா. இவர் பிரபல நடிகர் முரளியின் மகன் ஆவார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த அதர்வா தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், அதர்வா முதன் முதலில் 'பானா காத்தாடி' திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். இதன் பிறகு முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டிவீரன், ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள், பூமராங், 100, குருதி ஆட்டம், தள்ளி போகாதே போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நடிகராக இருக்கிறார்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் அதர்வாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் முரளி அதர்வாவை தலையில் தூக்கி வைத்திருப்பது போல் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கும் இப்புகைப்படத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.