மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
வேற லெவல்!! கின்னஸ் சாதனை படைத்த சன் டிவி குழந்தை நட்சத்திரம்...! அட யார்னு தெரியுமா?
சன் டிவி தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் அபியும் நானும். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வித்தியா வினு மோகன். இந்த சீரியலில் குழந்தை கதாபாத்திரங்களான அபி, முகில், சுமோ உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்களின் நடிப்பால் இந்த சீரியலுக்கு ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
சீரியலில் ழந்தைகளின் சுட்டித்தனம், சுறுசுறுப்பு நிறைந்த நடிப்பு அனைவராலும் பாராட்ட பெற்று வருகிறது. இந்த சீரியலில் முகிலன் கதாபாத்திரத்திற்கு நித்திஷ் என்ற சிறுவன் நடித்து வருகின்றார். இவரின் குறும்புத்தனம், குழந்தை பேச்சு அனைவரும் கவர்ந்து வருகிறது. மேலும் தன்னுடைய மிமிக்ரி மற்றும் டைமிங் காமெடி போன்றவற்றையும் சக சீரியல் பிரபலங்களுடன் சேர்ந்து எடுத்த ரீல்ஸ் போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு எக்கச்சக்கமான லைக்ஸ் பெற்றுவருகிறார் முகில்.
இந்நிலையில் நித்திஷ் தற்போது 60 நொடிகளில் 60 கார்ட்டூன் பெயர்களை சொல்லி உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போது நித்திஷ் நிகழ்த்தியிருக்கும் கின்னஸ் சாதனையை குறித்து பலரும், அவருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.