சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அபிராமி நேரில் சென்று யாரை சந்தித்துள்ளார் தெரியுமா? வைரலாகும் ஷாக் புகைப்படம்!!

Summary:

abirami met bigboss contestant sakshi

 பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.
 
பின்னர் விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே தனது வேலையை துவங்கினார். போட்டியாளர்களை பற்றி குறை கூறினார் . பின்னர் முகேன் குறித்து அபிராமியிடம் தவறாக கூறியதை கூறியதை தொடர்ந்து அபிராமி மற்றும் முகேனுக்கு இடையே பெரும் பிரச்சினை வெடித்தது. அப்பா மகள் போல இருந்த சேரனுக்கும் லாஸ்லியாவிற்கும் பிரச்சினை ஏற்பட்டது.

பின்னர் ஒருசில காரணங்களால் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில்  குறைந்த வாக்குகளை பெற்று அபிராமி வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, தன்னுடன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிற போட்டியாளர்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் மோகன் வைத்ய வீட்டிற்கு சென்றதாக தகவல் வெளிவந்தது. அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் தனது உயிர்தோழியாக இருந்த சாக்ஷியை சந்தித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்து கொண்ட செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில், செஸ்க்கி... பாப்பா பாடும் பாட்டு வெளியேறியதற்கு பிறகு இவரை சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


 


Advertisement