அடக்கடவுளே.. திடீரென பிக்பாஸ் அபினய் மனைவி ஏன் அப்படி செய்தார்? இதுதான் காரணமோ? செம ஷாக்கான ரசிகர்கள்!

அடக்கடவுளே.. திடீரென பிக்பாஸ் அபினய் மனைவி ஏன் அப்படி செய்தார்? இதுதான் காரணமோ? செம ஷாக்கான ரசிகர்கள்!


abinay-wife-removed-his-name-from-her-instagram-id

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பல்வேறு துறையைச் சேர்ந்த புதுமுகங்கள் பலரும் போட்டியாளராக கலந்து கொண்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் ராஜு, சிபி, பிரியங்கா, தாமரை, பவானி, நிரூப் மற்றும் அமீர் ஆகியோர் மட்டுமே உள்ளனர். 

இந்த சீசனில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் அபினய். பிக்பாஸ் வீட்டில் மிகவும் அமைதியாக இருந்த அவர் பிரபல நட்சத்திரங்களான ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரன் ஆவார். இவர் சில படங்களில் நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடையவில்லை.

அபினய் பிக்பாஸ் டாஸ்க்குகளை மிகவும் அமைதியாக, எந்த ஒரு விறுவிறுப்பும் இல்லாமலே செய்து வந்தார். ஆனால் யாரிடமும் எந்த பிரச்சினையும் செய்யாத அவர் பாவனியிடம் தவறான எண்ணத்தில் பழகுவதாக குற்றம் சாட்டப்பட்டு பல சர்ச்சைகள் கிளம்பியது. இதுகுறித்து கமலும் பஞ்சாயத்து செய்தார். இந்த நிலையில் அபினய் மனைவி அபர்ணா தனது கணவர் குறித்து தனக்கு நன்றாக தெரியும் என அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

bigboss

அதனைத் தொடர்ந்து எலிமினேஷனுக்கு பிறகு குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை அபினய் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது திடீரென அபினயின் மனைவி அபர்ணா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அபினய் பெயரை நீக்கி அபர்ணா வரதராஜன் என மாற்றி கொண்டுள்ளார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில் அபினய் மற்றும் அபர்ணா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அவர்கள்தான் உண்மையை விளக்க வேண்டும்.