ஆசைப்பட நடிகையின் தற்போதைய நிலைமை.. வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சிகுள்ளான ரசிகர்கள்.?



Aasai movie actress latest photos

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சுவலட்சுமி.

Aasai

இவர் தமிழில் முதன் முதலாக 1995 ஆம் வருடம் வெளியான 'ஆசை' திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு இப்படம் மிகப்பெரும் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான 'லவ் டுடே' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் கோகுலத்தில் சீதை, கல்கி, சந்தோசம், என் ஆசை ராசாவே போன்ற திரைப்படங்களில் நடித்த சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவரது நடிப்பு பாராட்டப்பட்டு வந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனால் வெள்ளி திரையிலிருந்து சின்னத்திரையில் நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தார் சுவலட்சுமி.

Aasai

இது போன்ற நிலையில், நடிகை சுவலட்சுமி கலிபோர்னியாவின் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார் சுவலட்சுமி. தற்போது இவரின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இப்ப புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.