சினிமா

அட.. சாயிஷாவை கல்யாணம் பண்ண உஷாராக ஆர்யா செய்த வேலையை பார்த்தீர்களா! அதுவும் அவங்க அம்மாகிட்ட..

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சாக்லெட் பாயாக இளம் பெண்களின் கனவு கன்னிய

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சாக்லெட் பாயாக இளம் பெண்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகர் ஆர்யா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்தநடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கு முன்பு ஆர்யாவுக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது. ஆனால் அவர் இறுதியில் எவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் எஸ்கேப் ஆனார். 

இந்த நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷாவுக்கு இடையே எவ்வாறு காதல் மலர்ந்தது என பலரும் கேட்ட நிலையில் இதுகுறித்து அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர். அதுபற்றி ஆர்யா கூறுகையில், நான் எவ்வளவோ லவ் பண்ணி பார்த்தும் எனக்கு செட் ஆகவில்லை. அப்போதுதான் கஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் சாயிஷாவை பார்த்தேன். மிகவும் பிடித்துப்போனது. எங்களது பழக்கம் காதலானது. இந்த நிலையில் நான் நேராக அவரது அம்மாவிடம் போய் எனக்கு சாயிஷாவை திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினேன்.

 

அதற்கு அவர்கள்  நான் எதுவும் பண்ண முடியாது, சாயிஷாவின் முடிவுதான் என்று சொன்னாங்க .இதற்கிடையில் நான் அவர்களை பார்க்கும்போதெல்லாம் ஒரு நாளைக்கு பத்து தடவையாவது ஐலவ் யூ சொல்லிக் கொண்டே இருப்பேன். இந்நிலையிலேயே அவர்களுக்கு என்னை பிடித்துப் போக, மகளிடம் பேசி நல்ல முடிவை எடுக்க வைத்தார்கள் என கூறியுள்ளார்


 


Advertisement