2000ல் கியூட் ஜோடி ஆர்யா மற்றும் சாயிஷா எப்படி இருந்துருக்காங்க பார்த்தீங்களா.! செம ஷாக்காகிருவீங்க! ட்ரெண்டாகும் புகைப்படம்!!aarya-sayisha-2000-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து சாக்லெட் பாயாக இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆர்யா, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில்  வெளிவந்த எனிமி படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருந்தார்.

நடிகர் ஆர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த  நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதாவது ஆர்யா தனது 38 வயதில் 21 வயது நிறைந்த சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

aarya

இந்நிலையில் ஆர்யாவின் இளவயது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது 2000ல் ஆர்யா மற்றும் சாயிஷா இப்படிதான் இருந்தார்கள் என்று இணைக்கப்பட்ட புகைப்படம்  ஒன்று இணையத்தில் வைரலாகிறது. அதில் ஆர்யா இளம் வயதிலும், சாயிஷா 2 அல்லது 3 வயது குழந்தையாகவும் உள்ளார். இந்த புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.