அரண்மனை 3ல் இப்படியொரு டுவிஸ்டா! பேயாக நடிக்கபோவது இவரா? செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!

அரண்மனை 3ல் இப்படியொரு டுவிஸ்டா! பேயாக நடிக்கபோவது இவரா? செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!


Aarya act as ghost in aranmanai 3

சுந்தர்சி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்த த்ரில்லர், காமெடி கலந்த பேய்ப்படம் அரண்மனை மற்றும் அரண்மனை 2. இதன் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி தற்போது அதன் தொடர்ச்சியாக அரண்மனை 3 படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா,  சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அரண்மனை மற்றும் அரண்மனை 2 இரு படங்களிலும் ஹன்சிகா பேயாக நடிக்க,  பேய் பிடித்து ஆடும் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா மற்றும் திரிஷா நடித்திருந்தனர்.

Aranmanai 3

இந்நிலையில் மிகவும் வித்தியாசமாக அரண்மனை 3ல் நடிகர் ஆர்யா பேய் பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் காமெடி நடிகர்கள் யோகிபாபு மற்றும் விவேக் இணைந்து கலக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு பேய் படம் என்றாலே பெண்களை வைத்து எடுத்து வந்தநிலையில் ஆண்பேய் பழிவாங்குமாறு லாரன்ஸ்தான் படம் எடுத்திருந்தார். 
இந்நிலையில் தற்போது சுந்தர்சியும்  இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.