இது தொடரணும்.! பயங்கர பிசியிலும் சர்ப்ரைஸாக ஆரி செய்த நெகிழ்ச்சி காரியம்! செம ஹேப்பியான பிக்பாஸ் நடிகை!!

இது தொடரணும்.! பயங்கர பிசியிலும் சர்ப்ரைஸாக ஆரி செய்த நெகிழ்ச்சி காரியம்! செம ஹேப்பியான பிக்பாஸ் நடிகை!!


aari-surpraise-visit-to-anitha-sampath-house

பிக்பாஸ் ஆரி, சக போட்டியாளரான அனிதா வீட்டிற்கு சர்ப்ரைஸாக திடீர் விசிட் கொடுத்துள்ளார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் 4 வது சீசன் கடந்த சில மாதங்களுக்கு தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்றநிலையில் கடந்த ஜனவரி 17 முடிவுக்கு வந்தது. இதில் மக்களுக்கு பரிச்சயமான பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர். இந்த நிலையில், ஆரி மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றியாளரானார். மேலும் பாலாஜி 2 வது இடத்தையும், ரியோ 3வது இடத்தையும் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத்தும் போட்டியாளராக கலந்து கொண்டார். அவர் பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதும் அனைத்தையும் வெளிப்படையாக தட்டிக்கேட்பது, கோபப்படுவது, அழுவது என இருந்து வந்தார். மேலும் கடுமையான போட்டியாளாராக இருந்த அவர் அவ்வப்போது மக்களின் விமர்சனங்களுக்கும் ஆளானார். மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டும் வெளியேறினார். இந்த நிலையில் அவர் வெளியேறிய ஓரிரு நாட்களில் அனிதாவின் தந்தை உயிரிழந்தார். இதனால் நொறுங்கி போயிருந்த அனிதாவிற்கு  ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்தனர்.

அனிதா பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது ஆரியிடம் கடுமையாக சண்டை போட்டு இருந்தாலும், அவருக்கு ஆதரவாகவும் நின்றுள்ளார். ஆரி வெற்றி பெற்றபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தது சனம் மற்றும் அனிதாதான். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பயங்கர பிசியாக இருக்கும் நடிகர் ஆரி, அனிதா சம்பத் வீட்டிற்கு சர்ப்ரைஸாக திடீர் விசிட் அடித்துள்ளார். அத்தகைய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த அனிதா, ஆரியுடன் குடும்பத்தினர் நேரம் செலவிட்டோம். உங்கள் வருகைக்கு நன்றி. இந்த சகோதர பிணைப்பு எப்போதும் தொடரும் என நம்புகிறேன் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.