சினிமா

அடுத்தடுத்தாக ரசிகர்களுக்கு பிக்பாஸ் ஆரி கொடுத்த சர்ப்ரைஸ்! பரிசாக என்ன வாங்கியுள்ளார் பார்த்தீர்களா!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி 17 முடிவுக்கு வந்தது. இதில் அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்து, மக்களின் பேராதரவை பெற்று நடிகர் ஆரி வெற்றியாளர் ஆனார். 

நடிகர் ஆரி நடிப்பு மட்டுமின்றி ஜல்லிக்கட்டு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, வெள்ளம் என அனைத்து பிரச்சினைகளுக்கு எதிராகவும் முன் நின்று குரல் கொடுத்துள்ளார். மேலும் மாறுவோம் மாற்றுவோம் என்ற அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

 பிக்பாஸ் முடிவடைந்த பிறகு ஆரி தனது ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அண்மையில் நெல்லையில் ரசிகர்களை  சந்தித்து அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார்.  அத்தகைய புகைப்படங்களை அவர், தனது இன்ஸ்டாகிராமில் நாம் ரசிகர்களாக கூடவில்லை, குடும்பமாக கூடினோம். உங்களின் ரசிகனாக நான் விதைத்த பரிசு நாட்டுவிதை, செலிபிரிட்டியாக நீங்கள் எனக்களித்த பரிசு உங்களின் ஆட்டோகிராப் என்று பதிவிட்டு ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement