சினிமா

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆஜீத் வெளியிட்ட முதல் வீடியோ! செம கூலாக என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

Summary:

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆஜித் முதன் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4, 13 வாரங்களை கடந்து  நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

இந்நிலையில் கடந்த வாரம் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர்  நாமினேட் ஆகியிருந்த நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று ஆஜித் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆஜீத் முதன் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டில் நான் 90 நாட்களுக்கு மேல் இருப்பதற்கு எனக்கு வாக்களித்து அன்பும், ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் மிகவும் நன்றி. நான் இனியும் எனது மியூசிக் மூலம் உங்களை என்டர்டெயின் செய்வேன். மேலும் பாசிட்டிவான நிறைய கருத்துக்களை பார்த்தேன் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். நெகட்டிவான கமெண்டுகளை விட்டுவிடுகிறேன் என கூலாக ஏராளமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.


Advertisement