
பிக்பாஸ் விட்டு வெளியேறிய ஆஜித்திற்கு அவரது குடும்பத்தார்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4, 13 வாரங்களை கடந்து நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஆஜீத், நாமினேட் ஆகியிருந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் அனைவரும் பெரும் வருத்தம் அடைந்தனர். ஆனால் ஆஜித் தனது குடும்பத்தை பார்க்க போகிறேன் என்ற மகிழ்ச்சியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு சென்ற ஆஜித்தை அவரது குடும்பத்தார்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement