சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் இவர்தானா! இறுதியாக லீக்கான வருத்தமான தகவல்!

Summary:

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஆஜித் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 , 12 வாரங்களை கடந்து 13வது வாரம் நிறைவடைய உள்ளது. மேலும்  நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் கடந்த வாரம் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடையவுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் மகிழ்ச்சியான பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தாலும், அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் பயங்கரமான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களும் நடந்தது. மேலும் நேற்று போட்டியாளர்களிடம் பேசிய நடிகர் கமல் இதுகுறித்து அனைவரிடமும் பேசி நாசுக்காக பல அறிவுரைகளையும் வழங்கினார்.

Bigg Boss Tamil 4: Aajeedh Khalique To Get Evicted From Kamal Haasan Show?  - Filmibeat

இந்த நிலையில் இந்த வார துவக்கத்தில் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர்  நாமினேட் ஆகியிருந்தனர். மேலும் அவர்களில் கேப்ரில்லா காப்பாற்றப்படுவதாக நேற்று கமல் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பயங்கமான ஆர்வம் நிலவி வரும் நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று ஆஜித் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


Advertisement