7 மாதங்களுக்கு முன்பு அப்படி இருந்த ஆர்யாவா இப்படி ஆயிட்டார்! என்ன ஒரு ஆச்சர்யம்

7 மாதங்களுக்கு முன்பு அப்படி இருந்த ஆர்யாவா இப்படி ஆயிட்டார்! என்ன ஒரு ஆச்சர்யம்


Aadya difference between 7 months before

ஆர்யா ஜிம்மில் இருந்து சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் பலரையும் ஆச்சயத்தில் ஆழ்த்தியது. தற்போது ஆர்யா 7 மாத்த்திற்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் புதிய புகைப்படத்தையும் சேர்த்து வெஎளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு படத்தின் கதைக்கும் ஏற்றவாறு தங்களது உடலை மாற்ற்ககூடிய நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவே. அந்த ஒரு சிலரில் ஆர்யா தற்போது முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

aarya

இதற்கு காரணம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்திற்காக ஏழு மாத கடின உடற்பயிற்சியால் தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றியுள்ளது தான். 1970களில் நடைபெற்ற குத்துசண்டையை மையபடுத்திய கதை என்பதால் ஆர்யா இவ்வளவு சிரமப்பட்டு தனது உடலை மெருகேற்றியுள்ளார் ஆர்யா.

தற்போது தனது இந்த மாற்றத்திற்கு பெரிதும் துணையாக இருந்த தனது பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும்  7 மாதங்களுக்கு முந்தைய புகைப்படத்தையும், இப்போதைய புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ஆர்யா, 7 மாதங்களாக உடற்பயிற்சி மற்றும் பாக்ஸிங் செய்ததன் தாக்கம் இது. 

எனது பயிற்சியாளர்கள் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. இவர்கள் எல்லோரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். பயிற்சியாளர்கள் ஜெய், ஜான்சன், சந்தோஷ், திரு, பிரசாத் ஆகியோருக்கு அன்பு கலந்த நன்றி” என்று கூறியுள்ளார்.