பிரபாஸின் ஆதிபுருஷ்! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரமாண்ட ட்ரைலர் இதோ!!

பிரபாஸின் ஆதிபுருஷ்! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரமாண்ட ட்ரைலர் இதோ!!



Aadhipurush trailer released

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். ராமாயண காப்பியத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

மேலும் ராவணனாக நடிகர் சையிப் அலிகானும் நடித்துள்ளார். இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் 
தற்போது ஆதிபுருஷ் படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.