"எல்லா சீட்டும் காலியா தான் இருக்க போகுது" ஆதிபுருஷ் படத்தின் ப்ரோமோஷன் கலாய்த்து வரும் ரசிகர்கள்..

"எல்லா சீட்டும் காலியா தான் இருக்க போகுது" ஆதிபுருஷ் படத்தின் ப்ரோமோஷன் கலாய்த்து வரும் ரசிகர்கள்..


Aadhi purush  promotion latest news

தெலுங்கு மொழியில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரபாஸ். தெலுங்கில் 2004 ஆம் ஆண்டு வெளியான 'வருசம்' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு டார்லிங், மிர்ச்சி, முன்னா, மிஸ்டர் பர்ஃபெக்ட் போன்ற வெற்றித் திரைப்படங்களை அளித்துள்ளார்.

Prabhas

இவ்வாறு பல ஹிட் திரைப்படங்களை சினிமா ரசிகர்களுக்கு அளித்தாலும் 2017 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான 'பாகுபலி' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே பிரபாஸ் பிரபலமான நடிகராக காணப்பட்டது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய ஹிட்டானது. இதன் பிறகு படத்தின் நடிகர் பிரபாஸ் 'ஆதிபுருஷ்' எனும் திரைப்படத்தில் கமிட்டானார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பிரமோஷன் வேலைகளில் படக்குழு தயாராகி வருகிறது.

Prabhas

இது போன்ற நிலையில், 'ஆதி புருஷ்' போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது 'ஆதிபுருஷ்' படத்தின் ப்ரோமோஷனில் "படம் திரையிடப்படும் போது கடவுள் அனுமானத்திற்காக ஒரு இருக்கை காலியாக விடப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை கலாய்த்து படத்தில் எல்லா இருக்கையும் காலியாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.