வாவ்.. செம கியூட்!! ரியல் ஜோடியாகும் ஆதி- நிக்கி கல்ராணி! வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!!
தமிழில் டார்லிங் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணி பிரபல நடிகரான ஆதியை காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆதி தமிழில் மிருகம், ஈரம், ஆடுபுலி, அரவான் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் நிக்கி கல்ராணி, ஆதி இருவரும் இணைந்து யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் படங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது நிக்கி கல்ராணி அதனை உறுதி செய்துள்ளார். மேலும் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.