சினிமா

தனது படத்தை வெற்றி ஆக்க தயாரிப்பாளர் எடுத்த விபரீத முடிவு...!

Summary:

a-producer-is-take-a-action-to-success

பெரும்பாலும் திரைக்கு வரும் படங்களை வெற்றி படம் ஆக்க தயாரிப்பளர்கள் அனைவரும் வேறு வேறு விதமாக செயல்படுவார்கள். இதில் புதுமுக நடிகர்கள் பழைய நடிகர்கள் என்றுலாம் பார்க்க மாட்டார்கள். 

ஒருமுறை தயாரிப்பாளர்கள் முடிவு செய்து விட்டால் அந்த படத்திற்கு எப்படியாவது விளம்பரத்தை ஏற்படுத்தி படத்தை வெற்றி பெற செய்து லாபம் பார்ப்பார்கள். இதே திட்டத்தை தான் தற்போது ஒரு தயாரிப்பாளர் கையில் எடுத்துள்ளார். ஆனால் இந்த தயாரிப்பாளர் கொஞ்சம் வித்தியாசமாக தான் யோசித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி என்ன யோசித்தார் தெரியுமா? 

இந்நிலையில்  "களவாணி சிறுக்கி"  என்ற படம் எடுத்திருக்கிறார்கள். அந்த படத்தில் புதுமுக நடிகர்கள் சாமி, திவாகர் மற்றும் அஞ்சு ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை 
தயாரிப்பாளர் ஆர்.நமச்சிவாயம் தயாரித்து ட்ரீம்ஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரைக்கு வர உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த திரைப்படம் வெளியாகும் நாள் முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் மட்டும் திரையிடப்படும் காட்சிக்கு வரும் நபர்களுக்கு ஒரு டிக்கெட்டிற்கு ஒரு கைலி வீதம் அங்கு வரும் அணைத்து நபர்களுக்கும் கைலி தர முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் படம் வெற்றி படமாக மாறும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர். 

இந்த திரைப்படத்தை டிரீம் சினிமாஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. ரசிகர்களுக்கு கைலி கொடுக்கும் பணியில் தற்போது அணைத்து திரையரங்குகளுக்கும் கைலியை அனுப்பும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.


Advertisement