பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த 8 முக்கிய பிரபலங்கள்!! தாறுமாறாக சிக்கிய போட்டியாளர்கள்!! வீடியோ இதோ!!8-journalist-entered-in-bigboss-house

பிக்பாஸ் சீசன் 3 காதல், மோதல், நட்பு என அனைத்தையும் கடந்து மிகவும் விறுவிறுப்பாகவும்,  பரபரப்பாகவும் 100 நாளை கடந்து இறுதிக்கட்டத்தில் உள்ளது. மேலும் 16 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்த பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது ஷெரின், லாஸ்லியா, முகேன்,  சாண்டி என நான்கு பேர் மட்டுமே இறுதி நிலையில் உள்ளனர். 

இந்நிலையில் இன்று 101வது நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த, முன்னாள் போட்டியாளர்களாக வனிதா, கஸ்தூரி, அபிராமி, சாக்ஷி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் வனிதா நுழைந்ததுமே ஷெரினிடம் தர்ஷன் வெளியேறுவதற்கு நீதான் காரணம் என கூறி பெரும் ரணகளத்தை  ஏற்படுத்தினார். மேலும் இதனால் ஷெரின் கதறி அலுத்து வீடே இரண்டானது.

bigboss

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் பத்திரிக்கையாளர்கள் 8 பேர் நுழைந்துள்ளனர். அவர்கள் போட்டியாளர்களிடம் சரமாரியாக கேள்விகளை கேட்கின்றனர். மேலும் சாண்டியிடம் எடக்குமடக்காக  கேள்விகேட்டுள்ளனர். இந்த நிலையில் அவர் தாறுமாறாக பதில் அளித்து அசத்தியுள்ளார். இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.