பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
தனது அடுத்த படத்தை தேர்ந்தெடுத்தது லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம்.!

லியோ திரைப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தன்னுடைய அடுத்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்காக அனிருத் 4-வது முறையாக இசையமைக்கவுள்ளார். லவ் டுடே திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்தில் நடிக்கவிருக்கின்றார்.
தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையான க்ரித்திஷெட்டி இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயங்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளார். நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்திருக்கின்ற இந்த புதிய திரைப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. எஸ்.ஜே.சூர்யா, க்ரித்தி ஷெட்டி, பிரதீப், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்திற்கு எல்.ஐ.சி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.