சினிமா

இணையத்தில் வைரலாக பரவும் நடிகர் விக்ரமின் குறும்படம்...! ரசிகர்கள் அதிர்ச்சி..!

Summary:

79/5000 Iṇaiyattil vairalāka paravum naṭikar vikramiṉ kuṟumpaṭam...! Racikarkaḷ atircci..! Actor Vikram's short film spread over the Internet...! Fans shock..!

பிரபல முன்னணி திரைப்பட நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விக்ரம். இவர் தற்போது தானாகவே முன் வந்து நான் விளம்பரத்தில் நடிக்கிறேன் என்று கூறியிருந்தார். அதன் படி அவர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

அந்த விளம்பரத்திற்கு "தேர்ட் ஐ" ( மூன்றாம் கண்) என்று அந்த படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். அந்த விழிப்புணர் விளம்பர குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது. அதில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் படமாகும்.

நடிகர் விக்ரம் நடித்துள்ள இந்த மூன்றாம் கண் என்கிற விழிப்புணர்வுக் குறும்படத்தை இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று இந்த குறும்பட வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது நடிகர் விக்ரம் பேசியபோது " சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும், சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளார். பின்பு இந்த குறும்படத்தை காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் வெளியிட்டார். 


Advertisement