வாவ் என்னவொரு திறமை! பிக்பாஸ் முகேனுக்கு 6 வயது சிறுவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி! இணையத்தை கலக்கும் வீடியோ! - TamilSpark
TamilSpark Logo
சினிமா வீடியோ

வாவ் என்னவொரு திறமை! பிக்பாஸ் முகேனுக்கு 6 வயது சிறுவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி! இணையத்தை கலக்கும் வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் முகேன் ராவ். மலேசியாவை சேர்ந்த பாடகரான இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதலே அனைத்து போட்டியாளர்களிடமும் மிகவும் அன்பாக. நடந்து கொண்டார் 

மேலும் கைவினைப் பொருட்கள் செய்வது கலகலப்பாக இருப்பது என அனைவரிடமும் நட்பு பாராட்டி வந்தார். மேலும் போட்டியாளர்கள் மட்டுமின்றி கமலும் கூட அவரை சில இடங்களில் பாராட்டி பேசி இருந்தார். இவ்வாறு மக்களிடையே பெருமளவில் பிரபலமான அவர் 105 நாட்களை வெற்றிகரமாக கடந்து இறுதிவரை சென்று  அதிகளவு வாக்குகளை பெற்று பிக்பாஸ் பட்டத்தை தட்டிச்சென்றார். 

மேலும் பாடகரான முகேன் ஏராளமான ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். அதிலும் அவர் சமீபத்தில்  பாடிய சத்தியமா சொல்லுறேன்டி பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது.

இந்நிலையில் ரகுராம் என்ற சிறுவன் தற்போது அந்த பாடலை தனது பியானோவில் வாசித்துள்ளார். இந்நிலையில் அவரது தந்தை இதனை தனது டுவிட்டர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo