நடிகை பூர்ணாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

நடிகை பூர்ணாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை பூர்ணா.  கேரளாவை சேர்ந்த இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம்.  கோலிவுட்டில் நடிக்க வந்தபின்னர் தமிழக ரசிகர்களால் கவரப்பட்டார். தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா, கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இவர், தலைவி என்ற பெயரிலான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட, மும்மொழியில் தயாராகும் படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து வருகிறார். இந்நிலையில் பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவரது தாயார் கொச்சி நகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். 

அந்த புகாரில், நடிகை பூர்ணாவின் வீட்டுக்கு திருமணம் தொடர்பாக 4 பேர் பேச வந்ததாகவும், அவர்கள் தங்களை மணமகன் தரப்பு உறவினர்கள் என்று கூறி வீட்டை புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பூர்ணாவிடம் ரூ.1 லட்சம் கேட்டு வருவதாகவும், கொடுக்கவில்லை என்றால் தீர்த்துக் கட்டிவிடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் உடனடியாக செயல்பட்டு, ரபீக், சரத், அஷ்ரப் மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த 4 பேர் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் வந்திருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo