ஒவ்வொரு அஜித் ரசிகனும் பெருமைப்படவேண்டிய தருணம்! முதல் இடம் பிடித்த விஸ்வாசம் படம்.2019 Most Influential Moments on Twitter listed

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து தல அஜித் நடித்த படம் விஸ்வாசம். கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றதோடு வசூலைம் வாரி குவித்தது.

இந்நிலையில் படம் வெளியாகி 10 மாதங்களுக்கு மேலாகியும் இன்றுவரை படத்தின் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் நிலவி கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இந்த வருடம் டிவ்ட்டரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய செல்வாக்கு மிக்க முக்கிய தருணங்கள் பட்டியலில் விஸ்வாசம் படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

viswasam

விஸ்வாசம் படத்தை அடுத்து லோக் சபா தேர்தல் இரண்டாம் இடத்தையும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மூன்றாம் இடத்தையும், மகேஷ் பாபு நடித்த மஹரிஷி படம் நான்காம் இடத்தையும், தீபாவளி கொண்டாட்டம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.

வேறு எந்த தமிழ் படத்திற்கும் கிடைக்காத பெருமை அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு கிடைத்துள்ளது. விஸ்வாசம் படத்துடன் இணைந்து வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படம் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.