ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட 2018, 12th Fail திரைப்படங்கள்; படக்குழுவினர் சோகம்.!



2018 Movie out From Oscar Awards 

 

ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில், நடிகர்கள் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் 2018 Everyone Hero.

கடந்த 2018ம் ஆண்டு கேரளாவை புரட்டிப்போட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற போராடிய ஒவ்வொருவரும் ஹீரோ என்ற பெயரில், இப்படம் எடுக்கப்பட்டது. 

இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத்தொடர்ந்து, படம் 96வது ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தற்போது படத்தேர்வு மற்றும் அதற்கு வாக்களிப்பது போன்றவை நடந்து வருகின்றன. 

இந்நிலையில், 2018 திரைப்படம் ஆஸ்கரில் முன்னேறுவதில் தோல்வி அடைந்து இருக்கிறது. அதேபோல, விக்ராந்த் மாசேயின் 12th Fail என்ற திரைப்படமும் ஆஸ்கர் பட்டியலில் நுழையும் என எதிர்பார்க்கப்பட்டு, அதுவும் தோல்வியை சந்தித்தது.

இப்படம் யுபிஎஸ்சி தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்பான விஷயங்களை மையமாக வைத்து படமாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது படக்குழுவினரை சோகத்திற்குள்ளாக்கி இருக்கிறது.