
2 super hit ajith movie remaked in hindi instursty
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித். இவர் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து, பெரும் ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்துள்ளார். மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் ஆகியவற்றை திருவிழாக்களை போல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இவர் நடிப்பில் வெளியாகி தமிழில் சூப்பர் ஹிட்டான வாலி, வரலாறு ஆகிய இரண்டு படங்களையும் பாலிவுட்டில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் கொண்ட நட்பின் காரணமாக அவரது கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். தற்சமயம் வலிமை படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வாலி, வரலாறு ஆகிய இரண்டு படங்களை பார்த்துள்ளார் போனி கபூர். அந்த இரண்டு படங்களும் அவரை வெகுவாக கவர்ந்துள்ளதால் ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார். முதலில் வாலி படத்தினை பாலிவுட்டில் அவர் ரீமேக் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த படத்தில் அவரது மகன் அர்ஜுன் கபூர் தான் ஹீரோவாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தல அஜித்தின் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளார்கள்.
Advertisement
Advertisement