சினிமா

நேர்கொண்ட பார்வை படம் பார்க்க விடுமுறை கொடுங்க - வைரலாகும் கல்லூரி மாணவனின் கடிதம்.

Summary:

நேர்கொண்ட பார்வை

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தை அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் H.வினோத்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் இன்று வெளியானதை அடுத்து, தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் தல ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் நேர்கொண்ட பார்வை படம் பார்ப்பதற்காக தனது துறைத்தலைவரிடம் விடுமுறை கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மாணவரின் அந்த கடிதத்தை பார்த்து கடுப்பான ஆசிரியர், கடிதத்தை நிராகரித்து பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இந்தக் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.  


Advertisement