விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
அதிர்ச்சியில் மக்கள்! உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக இடைவிடாது உயர்ந்து கொண்டே வரும் நிலையில், இன்று மேலும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்தநிலை பொதுமக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியாகவும், கவலையாகவும் மாறியுள்ளது.
இன்றைய தங்கம் விலை விவரம்:
நேற்றைய தினம் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,755 ஆகவும், ஒரு சவரன் ரூ.70,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றோ, தங்கத்தின் விலை மேலும் ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,775 ஆகவும், ஒரு சவரன் ரூ.70,200 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நகைபிரியர்கள் மகிழ்ச்சி... தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! இன்றைய தங்கம் விலை நிலவரம்...
தங்கத்தின் விலை மாற்றம்:
ஒரு காலத்தில் 60,000 ரூபாய்க்கும் கீழே விற்கப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது 70,000 ரூபாயைத் தாண்டியிருக்கிறது. இந்த விலை நிலைப்பாடு, எதிர்காலத்தில் மேலும் உயருமா? அல்லது குறையுமா? என்ற கேள்வி, இப்போது அனைவருக்கும் மனக்குழப்பமாகி விட்டது.
வெள்ளியின் விலை குறைவு:
தங்கம் விலை உயர்வின் மத்தியில், வெள்ளியின் விலை மட்டும் சற்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.108 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,08,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.