ஆப்பிள் நிறுவனம் அறிவித்த சூப்பர் ஜாக்பாட்.. ஹேக்கர்கள் முயன்று பார்க்கலாம்...!

ஆப்பிள் நிறுவனம் அறிவித்த சூப்பர் ஜாக்பாட்.. ஹேக்கர்கள் முயன்று பார்க்கலாம்...!



Super Jackpot announced by Apple.. Hackers can try and see.

ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க லாக்டவுன் மோட் அம்சத்தை இந்த வருடம் நடைபெற்ற WWDC நிகழ்வில் அறிமுகம் செய்தது. லாக்டவுன் மோட் என்பது ஒரு புதிய பாதுகாப்பு அம்ச தொழில்நுட்பமாகும். 

ஐபோன் பயனாளர்களுக்காக இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. லாக்டவுன் மோட் என்பது அரசியல்வாதிகள், மனித உரிமை வழக்கறிஞர்கள், மேலும் விஐபிகளுக்கு போனில் மேலும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பெகாசஸ் ஊழல் நடைபெற்ற பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகே ஆப்பிள் நிறுவனம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலமக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் ஹேக் செய்யப்பட்டது. அதன்பின் பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் ஆகியோரும் குறிவைக்கப்பட்டனர். இதனால் அப்போது ஆப்பிள் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

தற்பொழுது ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியிருக்கும், புதிய லாக்டவுன் மோட் iOS 16 வெர்ஷனில் கிடைக்குமாம். இந்த லாக்டவுன் மோட் ஆப்பிளின் ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் மேக் கணினிகளில், வேலை செய்யும் என கூறப்படுகிறது. மேலும் இந்த அம்சங்களை மீறி ஆப்பிள் சாதனங்களை ஹேக் செய்ய முடியாது என்று சொல்லப்படுகிறது. அப்படி லாக்டவுன் மோடையும் மீறி ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டால், அவர்களுக்கு இரண்டு மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.16 கோடியாகும்.