சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு கடந்த நிதியாண்டில் 45% உயர்வு: அதிர்ச்சிகர ரிப்போர்ட்..!
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அள்வு கடந்த ஆண்டு 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஏற்றுமதி 0.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் சதவீதம் கடந்த ஆண்டில் 45% அதிகரித்துள்ளது. மேலும் 7 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவையும் தாண்டி சீன பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
சீனாவிலிருந்து இந்தியாவிற்கு, மினரல் ஆயில், உரங்கள், மருத்துவ கருவிகள், பிளாஸ்டிக் பொருட்கள், வேதிப்பொருட்கள், இரும்பு மற்றும் உருக்கு, மின் கருவிகள் போன்றவை இந்தியாவிற்கு பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சீனாவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு, கடந்த நிதியாண்டில் அரை விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement