மீண்டும் உயர்ந்தது கேஸ் சிலிண்டர்களின் விலை: குடும்ப தலைவிகளின் தலையில் கல்லை போட்ட எண்ணெய் நிறுவனங்கள்..!

மீண்டும் உயர்ந்தது கேஸ் சிலிண்டர்களின் விலை: குடும்ப தலைவிகளின் தலையில் கல்லை போட்ட எண்ணெய் நிறுவனங்கள்..!


prices-of-domestic-gas-cylinders-rose-again

சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

இந்த மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது. இதில் வணிக சிலிண்டரின் விலை குறைந்தாலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இதனால் குடும்ப தலைவிகள் ஒரளவு நிம்மதியடைந்தனர்.

இந்த நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலை இன்று சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ..8.50 காசுகள் குறைந்து ரூ.2177.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மே மாதம் 7 ஆம் தேதி ரூ.1015.50 ஆகவும், கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரூ.1018.50 ஆகவும் இருந்த வீட்டு உபயோக கேஸ் கேஸ் சிலிண்டரின் விலை இன்று மேலும் 50 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.