ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்; குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பை நிறுத்துகிறது.. காரணம் இது தான்..!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்; குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பை நிறுத்துகிறது.. காரணம் இது தான்..!



Johnson & Johnson Company; Discontinues ,baby powder production.. This is the reason..

குழந்தைகளுக்கான தயாரிப்புகளில் பெயர் போன ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 2023-ஆம் ஆண்டிலிருந்து தனது டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்தப் போவதாகத் அறிவித்துள்ளது. 

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரில் ஆஸ்படாஸ் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதாகக் கூறி, கடந்த 2020-ஆம் வருடம் மே மாதம் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக அமெரிக்காவில் பல நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு நடந்து வந்தது. பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அமெரிக்கா, கனடாவில் அதன் விற்பனை நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் 2023-ஆம் ஆண்டிலிருந்து  குழந்தைகளுக்கான பவுடர் விற்பனையை நிறுத்துவதாக ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எங்களுடைய குழந்தைகளுக்கான அனைத்து டால்கம் பவுடர் தயாரிப்புகளையும்  இனிமேல் சோளமாவு பவுடருக்கு மாற்றப் போகிறோம். மேலும் எங்களின் பொருட்கள் மிகவும் பாதுகாப்பானவை. 

நீண்ட காலத்துக்கு எது வளர்ச்சிக்குரியது என்று பார்த்து, மதிப்பீடு செய்து பொருட்களைத் தயாரிக்கிறோம். இன்று உலகளவில் அனைத்துக் காரணிகளையும் ஆய்வு செய்தோம், எங்களின் தயாரிப்புகளுக்கான தேவை, வேறுபாடுகள், நுகர்வோர் மனநிலை போன்றவற்றை ஆய்வுசெய்தோம். இதை தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டிலிருந்து எங்கள் நிறுவனப் பவுடர் விற்பனை நிறுத்தப்படுகிறது, என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.